மயிலாடுதுறை அருகே மல்லியம் நத்தமேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்பிகா (30). இவரது கணவர் ஜாதகம், கைரேகை பார்க்கும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், பிள்ளைகள் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை கைரேகை பார்க்கும் தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என அம்பிகாவிடம் அவரது கணவர் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால், கணவனை விட்டு பிரிந்த அம்பிகா தனது பிள்ளைகளுடன் மல்லியத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தைகளை படிக்க அனுப்புவதற்கு ஊர் பஞ்சாயத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பை மீறி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியதால் கடந்த ஏழு மாதங்களாக தன்னை குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மல்லிகா, மயிலாடுதுறை பெண் துணை ஆட்சியரை சந்தித்து மனு அளித்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இதையும் படிங்க: ப.சிதம்பரம் வெற்றி செல்லுமா? நாளை தீர்ப்பு