ETV Bharat / state

ஊர் குளங்கள் ஏலம் எடுப்பதில் தகராறு - ஒருவர் அடித்துக் கொலை

author img

By

Published : May 21, 2020, 4:20 PM IST

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே ஊர் குளங்கள் ஏலம் எடுப்பதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏலத் தகராறில் அடித்துக் கொலை
ஏலத் தகராறில் அடித்துக் கொலை

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் உள்ள குளங்கள் ஏலம் விடப்பட்டன. அதில், கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(50), இளங்கோவன் ஆகியோருக்கு இடையே குளங்கள் ஏலம் எடுப்பதில் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர்.

அதில் இளங்கோவன் தரப்பு தாக்கியதில் சரவணன் என்பவர் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலே மயங்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சரவணன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கொள்ளிடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சபரிராஜன், கீர்த்திவாசன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஊரடங்கு அமலில் இருக்கும் போது கிராம மக்களை கூட்டி ஏலம் விடப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.