ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் புதிய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். வேதாந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல், புதுச்சேரியிலும் ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஹட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய நிலங்கள் அழிந்துபோவதுடன் விவசாய உற்பத்தியும் பாதிக்கும் என முழக்கமிட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சிபிஐ ஆர்ப்பாட்டம்! - HydroCarbon
நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் புதிய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். வேதாந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல், புதுச்சேரியிலும் ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஹட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய நிலங்கள் அழிந்துபோவதுடன் விவசாய உற்பத்தியும் பாதிக்கும் என முழக்கமிட்டனர்.
Body:ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், வேதாந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். காரைக்காலில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட்டால் அப்பகுதியில் வாழும் விவசாயிகளும், மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறிய விவசாயிகள், காரைக்காலில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி இல்லை என புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.Conclusion: