ETV Bharat / state

'வாக்களிக்கும் ஆர்வத்தை குறைக்கும் தேர்தல் அலுவலர்கள்...!' - திமுக வேட்பாளர் ராமலிங்கம் குற்றம்  சாட்டினார்.

நாகப்பட்டினம்: வாக்களிக்கும் ஆர்வத்தை பொதுமக்களிடம் குறைக்கும் விதமாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுவதாக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை
author img

By

Published : Apr 18, 2019, 3:01 PM IST

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறையில் மக்கள் வாக்களிக்கும் ஆர்வத்தை குறைக்கும் விதமாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுகின்றனர் என மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.

இது குறித்து ராமலிங்கம் பேசுகையில், 'கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை உட்பட பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்குவது கால தாமதம் ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கும்பகோணம் 95, 104 ஆகிய வாக்குச்சாவடிகளில் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இயந்திர கோளாறு சரி செய்கிறோம், மாற்று ஏற்பாடு செய்கிறோம் என்று தேர்தல் அலுவலர்கள் அலைக்கழிக்கின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு போதுமான பயிற்சியளிக்கவில்லை. மேலும், வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க தேர்தல் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

திமுக வேட்பாளர் ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பு

Intro:பொது மக்கள் வாக்களிக்கும் ஆர்வத்தை குறைக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்று மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம் குற்றச்சாட்டு

Body:மயிலாடுதுறை மக்களவைத தொகுதி வாக்கு மையங்களை திமுக வேட்பாளர் ராமலிங்கம் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் கும்பகோணம் திருவிடைமருதூர், மயிலாடுதுறை உட்பட பல்வேறு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுபதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்குவது கால தாமதம் ஆகியுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கும்பகோணம் 95, 104 ஆகிய வாக்குச்சாவடிகளில் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இயந்திர கோளாறு சரி செய்கிறோம், மாற்று ஏற்பாடு செய்கிறோம் என்று அதிகாரிகள் அலைக்கழிக்கின்றன. அதிகாரிகளுக்கு தேர்தலுக்கு முறையான பயிற்சி அளிக்க வில்லை. பூத் ஸ்லீப் வழங்கப்பட்டுள்ளது அதனை, கொண்டு செல்லும் வாக்காளர்களுக்கு ஓட்டர் ஐடி, டிரைவிங் லைசென்ஸ், வேறு ஏதாவது வேண்டும் என்று கூறி மக்களை அலைக்கழிக்கின்றன. மக்கள் விரும்பி வாக்களிப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காலதாமதமாக தொடங்குவது மையங்களில் நேரம் நீடித்து வழங்க தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று பேட்டியளித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.