ETV Bharat / state

வாக்கு பெட்டிகள் இருக்கும் பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு - மயிலாடுதுறை

நாகை : மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் வைத்திருக்கும் பாதுகாப்பு அறையை நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்
author img

By

Published : May 18, 2019, 4:24 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மணப்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ச்சியாக காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்த பகுதியை அரசியல் கட்சி நிர்வாகிகளும் மற்றும் வேட்பாளர்களை சார்ந்தவர்களும் பார்வையிடுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Intro:மயிலாடுதுறையில் வாக்குப்பெட்டிகள் வைத்திருக்கும் காப்பு அறையை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணப்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் மயிலாடுதுறையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் காப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளன இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சுரேஷ்குமார் காப்பு அறைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ச்சியாக காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் அரசியல் கட்சி நிர்வாகிகளும் மற்றும் வேட்பாளர்களை சார்ந்தவர்களும் வாக்கியத்தை பார்வையிடுவதற்கு அனுமதி தரப்பட்டு உள்ளது எனவும் காப்பு அவர்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

பேட்டி :-சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சியர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.