ETV Bharat / state

'கோடைக்கால குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ள தயார்..!' - மயிலாடுதுறை ஆட்சியர் - மயிலாடுதுறை

மயிலாடுதுறை: கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை
author img

By

Published : May 4, 2019, 3:03 AM IST

மயிலாடுதுறை மக்களவைத் தேர்தலில் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் பாதுகாப்பு உறுதிதன்மை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளன. முழு நேரமும் கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ள விதிகளின்படி வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டுள்ளன. குடிநீர் பிரச்னை ஏற்பட்டால் அதனைத் தெரிவிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது" என்றார்.

Intro:கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டால் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தகவல்:-

Body:மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தலில் வாக்குபதிவான மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பின் உறுதித்தன்மை குறித்து இன்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கூறுகையில்:
தற்போது இருக்கக்கூடிய இந்த கோடை காலத்தில் பொது மக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் குறிப்பாக குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்காக பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோடைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே எந்தெந்த இடங்களில் எல்லாம் நீர்நிலைகள் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதற்கு உண்டான உடனடி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையானது இதற்காகவே சிறப்பாக திறக்கப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலாவது குடிநீர் பிரச்சினை என்ற தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிளாக்கிலும் மோட்டார் பழுது ஏற்பட்டால் மாற்று மோட்டார்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்டால் அதற்காக உடனடியாக ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இதையும் தாண்டி ஏதேனும் இடத்தில் அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு என்ற பட்சத்தில் தற்காலிகத் தடை சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை அவர்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு முழுமையாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பேட்டி:- சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.