நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருக்கடையூர், டி.மணல்மேடு, காழியக்கநல்லூர் உள்ளிட்ட ஆறு கிராமங்களிலிருந்தும் 2017-18ஆம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை 1,875 விவசாயிகள் செலுத்தினர். வறட்சியாலும், வெள்ளத்தினாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்து காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
அதில் 71 நபர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், இன்று திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.