ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் - நாகை ஆட்சியர் - undefined

நாகை: வாக்கு எண்ணிக்கையையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக, ஆய்வு மேற்கொண்ட பின் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் - நாகை மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : May 22, 2019, 8:29 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் நாளை எண்ணப்படவுள்ளன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சுரேஷ் குமார் வாக்கு எண்ணும் மையத்தை நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வாக்கு எண்ணிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் - நாகை மாவட்ட ஆட்சியர்

"மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள ஊழியர்களுக்கு இணையதள வசதி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

பொதுமக்கள் உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக, தேர்தல் ஆணையம் சுவித்தா என்ற செயலியை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.

Intro:மயிலாடுதுறை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு , 14 மேஜைகளில் ஒவ்வொரு சுற்றாக வாக்கு எண்ணப்படும் என்று பேட்டி:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் எனப்படுகின்றன. இதற்கான வாக்குப்பெட்டிகள் காப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரும் மயிலாடுதுறை தேர்தல் அதிகாரியுமான சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் என்றும் 14 மேஜைகளில் இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இதற்காக அறிவிப்புகள் ஒவ்வொரு சுற்றிலும் அறிவிக்கப்படும் இணையதள வசதி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குலுக்கல் முறையில் 5 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு விவிபாட் வாக்குச்சீட்டுகள் வாக்கு இயந்திரத்துடன் ஒப்பீடு செய்யப்படும் என்றும், இந்த தேர்தலில் பொது மக்கள், கட்சியினர் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக சுவித்தா என்ற செயலி புதிய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். வாக்கு எண்ணிக்கை தினத்தன்று 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் பணிக்கு 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அமைதியான முறையில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுவதற்கு வேட்பாளர்கள், கட்சி முகவர்கள், முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

பேட்டி :- சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சியர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.