ETV Bharat / state

விடுமுறை அளிக்காததால் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நடத்துநர்

நாகப்பட்டினம்: விடுமுறை அளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நடத்துநர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற நடத்துநர்
author img

By

Published : May 3, 2019, 3:43 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில், பூந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கண்ணில் ஏற்பட்ட சிறு குறைபாடு காரணமாக மருத்துவ விடுப்பு எடுத்து, சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் ஒரு வார காலம் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து, அய்யாதுரை ஒரு வாரத்திற்குப் பின்னர், இன்று மருத்துவ விடுப்பு சான்றுடன் நாகையில் உள்ள போக்குவரத்து கழக கிளை மேலாளரை சந்தித்துள்ளார். ஆனால் கிளை மேலாளர் விடுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

விடுமுறை அளிக்காததால் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நடத்துநர்

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அய்யாதுரை செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். இதனையடுத்து சக போக்குவரத்து துறை ஊழியர்கள் கூட்டம் கூடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து அவர் தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்கிவந்தார்.

Intro:நடத்துநர் ஒருவர் நாகையில் உள்ள மண்டல அரசு போக்குவரத்து கழக உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Body:உடல்நிலை பாதிப்புக்கு விடுப்பு தராமல், போக்குவரத்து கழக அதிகாரிகள் பணிச்சுமை தருவதாக கூறி, நடத்துநர் ஒருவர் நாகையில் உள்ள மண்டல அரசு போக்குவரத்து கழக உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகப்பட்டினத்தில் உள்ள மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில், பூந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் இவருக்கு கண்ணில் ஏற்பட்ட சிறு குறைபாடு காரணமாக மருத்துவ விடுப்பு எடுத்து, சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் ஒரு வார காலம் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து,

அய்யாதுரை ஒரு வாரத்திற்குப் பின்னர், இன்று மருத்துவ விடுப்பு சான்றுடன் நாகையில் உள்ள போக்குவரத்து கழக கிளை மேலாளரை சந்தித்துள்ளார். அப்போது கிளை மேலாளர் விடுப்பை ஏற்றுக் கொள்ளாததால், மன உளைச்சலுக்கு ஆளான அய்யாதுரை நாகையில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை மின்விளக்கு உயர் கோபுரத்தில் ஏறினார். பின்னர் டவரில் நின்றுகொண்டு  தனக்கு கிளை மேலாளர் விடுப்பு தராமல் பணிச்சுமை தருவதாகவும், தனது சம்பளப் பணத்தில் 6000 ரூபாய் பிடித்தம் செய்ததாக கூறியும் அவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனை பார்த்த சக ஓட்டுனர் நடத்துனர் மற்றும் பணிமனை ஊழியர்கள் அலறியடித்து கொண்டு டவரை நோக்கி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு துறை மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் டவரை விட்டு இறங்கி வருமாறு நடத்துனர் அய்யா துறையிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவரது பிரச்சினை குறித்து உரிய தீர்வு எட்டப்படும் என போலீசார் கூறியதைத் தொடர்ந்து  தீயணைப்பு துறை வீரர்கள் உயர் கோபுரத்தில் இருந்து அவரை உடனடியாக இறக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள நாகப்பட்டினம் போலீசார் அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல்நிலை பாதிப்புக்கு விடுப்பு தராமல், போக்குவரத்து கழக அதிகாரிகள் பணிச்சுமை தருவதாக கூறி நடத்துநர் நாகையில் உள்ள மண்டல அரசு போக்குவரத்து கழக உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலை விடுத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.