ETV Bharat / state

புயல் எச்சரிக்கை வந்தும் நடவடிக்கை இல்லை: மீனவர்கள் குற்றச்சாட்டு - பானி புயல்

நாகை: ஃபானி புயல் ரெட் அலர்ட் விடுத்தும், நாகை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் முடங்கிக் கிடப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

magao
author img

By

Published : Apr 26, 2019, 3:17 PM IST

தமிழ்நாட்டைப் புரட்டிப்போட்ட கஜா புயல் பாதிப்புகள் ஐந்து மாதங்கள் ஆகியும், இன்னும் மாறாத நிலையில், வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபானி புயலானது, கஜா புயலைவிட இரு மடங்கு வேகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால் மீனவர்களும், விவசாயிகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே புதிய புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாகை மாவட்ட நிர்வாகம், அப்பகுதி மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை குறித்து எந்த விதமான அறிவிப்புகளும் வழங்கவில்லை என மீனவர்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும் புயலில் வீடுகளை இழந்த குடிசைவாசிகளுக்கு இதுவரை நிவாரணமும் வழங்கவில்லை என கூறும் அப்பகுதி மீனவர்கள்,

அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஃபானி புயலின் தீவிரம் குறித்து முன்னேற்பாடுகள் எதையும் மாவட்ட நிர்வாகமோ, மீன்வளத் துறையோ எச்சரிக்கை விடுக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்காததால் நாகை மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 500 முதல் 600 க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை கரையில் வரவழைப்பதற்காக மீன்வளத் துறையினர் எவ்வித அறிவிப்பும் வழங்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, குடிசைப் பகுதியில் வாழும் மீனவர்களை மேடான பகுதிக்கு கொண்டு வருவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறைகூறும் அப்பகுதி மீனவப் பெண்கள், புயல் நேரத்தில் அவசர அவசரமாக உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தாங்கள் குருவி போல் சேர்த்து வைத்த பொருட்களையும், வீடுகளையும் விட்டுவிட்டு மாற்று இடம் தேடி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Nagappattinam

Intro:ஃபானி புயல் ரெட் அலர்ட் விடுத்தும், நாகை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் முடங்கி கிடப்பதாக மீனவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.

Body:ஃபானி புயல் ரெட் அலர்ட் விடுத்தும், நாகை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் முடங்கி கிடப்பதாக மீனவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என, உறவினர்கள் அச்சம்:

தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் பாதிப்புகள் ஐந்து மாதங்கள் ஆகியும், இன்னும் மாறாத நிலையில், வங்கக்கடலின் மேலும் ஒரு புதிய புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபானி புயலானது கஜா புயலைவிட இரு மடங்கு வேகமாக இருக்கும் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ள காரணத்தால் மீனவர்களும், விவசாயிகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே புதிய புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு வருகிறது,

இந்நிலையில் நாகை மாவட்ட நிர்வாகம், அப்பகுதி மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை குறித்து எந்த விதமான அறிவிப்புகளும் வழங்கவில்லை என மீனவர்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும் புயலில் வீடுகளை இழந்த குடிசைவாசிகளுக்கு இதுவரை நிவாரணமும் வழங்கவில்லை என கூறும் அப்பகுதி மீனவர்கள்,

அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஃபானி புயலின் தீவிரம் குறித்து முன்னேற்பாடுகள் எதையும் மாவட்ட நிர்வாகமோ, மீன்வளத் துறை எச்சரிக்கை விடுக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்காததால் நாகை மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 500 முதல் 600 க்கும் மேற்பட்ட பைபர்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை கரையில் வரவழைப்பதற்காக மீன்வளத் துறையினர் எவ்வித அறிவிப்பும் வழங்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனிடையே குடிசைப் பகுதியில் வாழும் மீனவர்களின் மேடான பகுதிக்கு கொண்டு வருவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறை கூறும் அப்பகுதி மீனவ பெண்கள், புயல் நேரத்தில் அவசர அவசரமாக உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தாங்கள் குருவி போல் சேர்த்து வைத்த பொருட்களை வீடுகளையும் விட்டுவிட்டு மாற்று இடம் தேடி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.