மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பக்த மார்க்கண்டேயனுக்காக எமனை இறைவன் சம்ஹாரம் செய்த தலம் என்று போற்றப்படுவதால், இங்கு நாள் தோறும் 60 வயது நிரம்பியவர்க்கு செய்யப்படும் சஷ்டி அப்த பூர்த்தி, மணிவிழா சதாபிஷேகம், ஆயுஷ் ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம்.
அதற்காக நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். அவர்கள் காணிக்கையும் செலுத்துவர், அந்த வகையில் மார்ச் மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அந்த பணியில் 150 பேர் ஈடுபட்டனர். அதில் ரூ. 62 லட்சம் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: கோயில்கள் வியாபரத் தளங்கள் அல்ல - நீதிபதிகள் கண்டனம்