ETV Bharat / state

கறி விருந்து வைத்த 'டிக் டாக் புள்ளிங்கோக்கள்' - பிணையில் விடுவிப்பு - கரோனா வைரஸ் அச்சுறுத்தல்

நாகை: மயிலாடுதுறை அருகே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கறி விருந்து நடத்தி அதனை டிக் டாக் செயலியில் பதிவேற்றிய 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

tic-tac-pointeco-a-curry-party-breach-of-curfew

author img

By

Published : Apr 18, 2020, 8:04 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் ஒருசில மாவட்டங்களிலுள்ள இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், கேரம், கிரிக்கெட், ஊர் சுற்றுவது, கறி விருந்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 30 இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து, வாய்க்கால் மதகுப் பகுதியில் பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் அதனை காணொலியாகப் பதிவு செய்து டிக் டாக் செயலியிலும் பதிவேற்றிவுள்ளனர்.

டிக் டாக்கில் இக்காணொலி வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதனையடுத்து வில்லியநல்லூர் கிராமத்தைச் சுற்றிவளைத்த தனிப்படைக் காவல் துறையினர், கறி விருந்தில் பங்கேற்ற 10 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்த இளைஞர்களை மணல்மேடு காவல் நிலையத்தில் வைத்து, விசாரணை செய்த காவல் துறையினர், 'ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றமாட்டோம்' என உறுதிமொழியை ஏற்கவைத்து, காவல் நிலையப் பிணையில் அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவரை மீறி கறி விருந்து வைத்த 'டிக் டாக் புள்ளிங்கோக்கள்'

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற அதிகாரிகள் ஒருபுறம் உயிரைக்கொடுத்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில், எவ்வித அச்ச உணர்வும் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் என்று தான் திருந்துவார்களோ? என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மதுபான குடோனை உடைத்து பாட்டில் திருடிய பாய்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.