ETV Bharat / state

மருத்துவமனையில் ஊழியர்களுக்கிடையே மோதல் - மூவர் கைது - mayiladuthurai crime news

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது
கைது
author img

By

Published : Sep 28, 2021, 9:11 AM IST

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கட்டுக்கட்டும் பிரிவில் பணியாற்றி வருபவர் ரமேஷ்(53). இவருக்கும் அதேமருத்துவமனையில் சவக்கிடங்கில் பணியாற்றிவரும் ரமேஷ்(42) என்பவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று (செப் 27) பணி இல்லாததால் கட்டுக்கட்டும் பிரிவுக்குச் சென்ற ரமேஷ், நோய் வாய்ப்பட்டவரைப் போல் இருப்பதாக, கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சவக்கிடங்கில் பணியாற்றும் ரமேஷ் தனது மகன்கள் தியாகராஜன், தீனதயாளன் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு வரவைத்துள்ளார். பின்பு பணி முடித்து இரவு வீட்டுக்குக் கிளம்பிய ரமேஷை தனது மகன்களுடன் சேர்ந்து அடித்து கீழே தள்ளியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சவக்கிடங்கில் பணியாற்றிவரும் ரமேஷ் அவரது மகன்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கட்டையால் அடித்த காவலர்; இருவர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.