நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய 250 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்தாண்டு கரோனா பாதிப்பால் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த அரசு நேரடி கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஊரடங்கு உத்தரவால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. நியாய விலைக்கடைகளுக்கு தட்டுப்பாடின்றி அரிசி அனுப்பும் வகையில் மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகா பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரவை செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் மயிலாடுதுறையிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு ஆயிரம் டன் நெல் மூட்டைகளை அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்: விவாசியகள் வேதனை