நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.
இதில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,100 மாணவிகள் கலந்துகொண்டு தங்களது உறவினர்களுக்கு ஒரே நேரத்தில் கடிதம் எழுதும் சாதனை நிகழ்த்தினார். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வாசகங்களை எழுதிய மாணவிகள், அதற்கான உறுதிமொழியையும் வாசித்து தங்களது சாதனையைப் பதிவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், மூன்று உலக சாதனைகளைப் பதிவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தலைமையில் இந்தச் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதையும் படிங்க : மேம்பாலம் கட்டடத்தின் மேலிருந்து கொட்டும் தண்ணீரில் சினிமா பாட்டு!