ETV Bharat / state

Pattanapravesham:தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம்; ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது

author img

By

Published : Jun 10, 2023, 10:24 PM IST

Updated : Jun 10, 2023, 10:40 PM IST

தருமபுரம் ஆதீனம் நடத்தும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவைகளைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேச விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது!!

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற 'பட்டினப் பிரவேசம்' விழா (Pattanapravesham) கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆதீன குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேச விழா இன்று (ஜூன் 10) இரவு 9 மணி அளவில் நடைபெற்றது.

மனிதனை மனிதன் சுமந்து செல்வதா என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஆண்டு பட்டினப் பிரவேசத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஆன்மீக நிகழ்வுகளில் அரசு தலையிடுவதற்கு பக்தர்கள், இந்து அமைப்பினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ்நாடு அரசு தடையை வாபஸ் பெற்றது. பின்னர் கடந்தாண்டு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டினப் பிரவேச திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில் மனிதனை மனிதன் சுமந்து செல்வது மனித உரிமை மீறல் என்று கூறி பட்டினப் பிரவேச விழாவிற்கு திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ்மண் தண்ணூரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: Pattanapravesham: மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்க முடியாது! பட்டணப்பிரவேசத்திற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராத நிலையில் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பட்டினப் பிரவேசம் மேற்கொள்ளும் தருமபுர ஆதீனகர்தருக்கு எதிராகவும், தடைவிதிக்க கோரியும் முழக்கமிட்டனர். பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு எதிர்ப்பு உள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 7 டி.எஸ்.பிக்கள், 14 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 360க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் உள்ளனர்.

இதையும் படிங்க: ஊருக்குள் தத்தளிக்கும் பார்வையற்ற 'பாகுபலி யானை'-யை மீட்டு வனப்பகுதிக்குள் விட கோரிக்கை

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் ‌அடைத்தனர். இந்நிலையில் பட்டினப் பிரவேசம் நிகழ்வில் சோழிய வேளாளர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளி பல்லக்கில் உலா வந்த தருமபுரம் ஆதீன மடாதிபதி!

Last Updated : Jun 10, 2023, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.