ETV Bharat / state

தியாகி வள்ளியம்மையின் நினைவு இல்லம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் - மாவட்ட ஆட்சியர் - தியாகி வள்ளியம்மையின் நினைவு இல்லம்

மயிலாடுதுறை: தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு இல்லம் விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

thiyagi
thiyagi
author img

By

Published : Feb 22, 2021, 10:10 PM IST

இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்பதற்குமுன், காந்தி தென்னாப்பிரிக்காவில் நிலவிவந்த நிறவெறியை எதிர்த்துப் போராடினார். 1913ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலை வரியை எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் தமிழர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடியைச் சேர்ந்த வள்ளியம்மையும் ஒருவர். முதன்முதலில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர், 'தில்லையாடி வள்ளியம்மை' என்று காந்தி கூறியிருந்தார்.

கடந்த 1913ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த வள்ளியம்மை, 1914ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி உயிரிழந்தார். காந்தியால் பெருமைப்படுத்தப்பட்ட தில்லையாடி வள்ளியம்மையின் 107ஆவது நினைவு தினம் இன்று (பிப்.22) அனுசரிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள வள்ளியம்மை நினைவுமணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சங்க நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் தில்லையாடி வள்ளியம்மை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி நினைவஞ்சலி செலுத்தினார்.

தியாகி வள்ளியம்மையின் நினைவு இல்லத்தில் அஞ்சலி

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, '16 வயதில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த வள்ளியம்மை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். பொதுமக்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்து விரைவில் அவரது நினைவு இல்லம் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க: ஃபிளிப்கார்ட் ஊழியரைத் தாக்கி, அலுவலகத்தை நொறுக்கும் போதை கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.