ETV Bharat / state

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர கோயில் தெப்ப உற்சவம்! - thiruvenkaadu

நாகை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர கோயில் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தனர்.

புதன் ஸ்தலம் தெப்பத் திருவிழா  சுவேதாரண்யேஸ்வர கோயில் தெப்பத்திருவிழா  thiruvenkaadu  thiruvenkadu kovil theppa urchavam
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர கோயில் தெப்ப உற்சவம்
author img

By

Published : Feb 17, 2020, 3:57 PM IST

நாகை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகும். இத்தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம், இங்கு அகோர மூர்த்தியாக தனி சன்னதி கொண்டு விளங்குகிறார். சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ, அவ்வாறு எதிரிகளை ராமன் சம்காரம் செய்தார் என வால்மீகி இராமயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மையை விளக்கியுள்ளார்.

இந்தக் கோயிலின் ஆண்டு இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 12ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினார்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர கோயில் தெப்ப உற்சவம்

இதனையடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை ஏழு முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இந்நிகழ்வை முன்னிட்டு ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் நடைபெற்ற ஆசியாவின் மிகப் பெரிய ஆதிவாசி திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.