நாகை மாவட்டம் - மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட வட்டங்களுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஊரடங்கு தளர்வால் 249 பேர் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தனர்.
இதில் 188 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கரோனா வார்டிலும், 61 பேர் மன்னம்பந்தல் தனியார் கல்லூரி தங்கும் விடுதியிலும் மே ஐந்தாம் தேதி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். மேலும் அனைவரிடமும் கரோனா தொற்று பரிசோதனைக்காக ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலானோர், பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரையும், அரசு மருத்துவமனையிலிருந்த அனைவரையும் பேரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது 64 பேர் மட்டுமே அரசு மருத்துவமனை கரோனா வார்டில் உள்ளனர். கரோனா வார்டிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் யாருக்காவது கரோனா தொற்று இருந்தால், அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் ஐந்து கரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ்