ETV Bharat / state

சிறுமியை காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் போக்சோவில் கைது - nagai district news

நாகை: பதினாறு வயது சிறுமியை காதல் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்திவந்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமியை காதல்திருமணம் செய்த வாலிபர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது

author img

By

Published : Feb 28, 2021, 12:06 PM IST

தரங்கம்பாடி அருகே கீழ்மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் வினோத்ராஜ் (21), ஓட்டுநராக வேலை பார்த்துவருகிறார். இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

சிறுமியை திருமணம் செய்துகொள்ள விருப்பப்பட்ட வினோத்ராஜ், சிறுமியின் வீட்டாரிடம் பெண் கேட்டுள்ளார். சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடையாததால் திருமணம் செய்துதர சிறுமியின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.

ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வினோத்ராஜ், சிறுமியை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்திவந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவின் காரணமாக சிறுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். பரிசோதனையில் சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது.

எனவே இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத்ராஜை கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க : ஏப்ரல் 1 முதல் இலவச மும்முனை மின்சாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.