ETV Bharat / state

நேரடி நெல் விதைப்பு விவகாரம் ; 144 தடை உத்தரவு - mayiladuthurai

மயிலாடுதுறை அருகே மேலபருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் நாளை விவசாயிகள் மீண்டும் நேரடி நெல் விதைப்பு பணிகளை தொடங்க உள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் 144(3) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயக் கூலி தொழிலாளர்களிடையே பிரச்சனை

author img

By

Published : Jun 30, 2022, 10:43 AM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதால் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 27ம்தேதி வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜை ஒரு சிலர் தாக்க முயன்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அன்றைய தினமே இந்தச் சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயக் கூலி தொழிலாளர்களிடையே பிரச்சனை

இந்நிலையில் பருத்திகுடி கிராமத்தில் மூன்று விவசாயிகள் இன்று 13 ஏக்கர் நிலத்தில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு செய்ய உள்ளனர். 27ம்தேதி நேரடி நெல் விதைப்பு செய்தபோது சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாலும், போராட்டக்காரர்களும் விவசாயிகளும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், இருதரப்பினருக்கும் கோயில் விழாவில் தகராறு ஏற்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகாவிற்கு அறிக்கை அளித்து தடையாணை உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர்.

காவல்துறை அறிக்கையின் பேரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 144(3)ன் படி மேல பருத்திக்குடி மற்றும் கீழப் பருத்திக்குடி , உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 (3) தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல் - மயிலாடுதுறை, திருநெல்வேலி - ஈரோடு ரயில்கள் ஜூலை 11 முதல் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.