மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் மூர்த்தி (55). தச்சு வேலை பார்த்து வரும் இவர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். வழக்கம்போல் டியூசனுக்கு வந்த 12 வயது சிறுமியிடம் மூர்த்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி கூறியதை அடுத்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது பாய்ந்த போக்சோ