கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
கடந்த மே மாதம் முதற்கட்டமாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் பணமும், 14 வகை பொருட்களுடன் கூடிய மளிகைத் தொகுப்பும், நேற்று முன் தினம் (ஜூன். 15) முதல் அனைத்து ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.
மயிலாடுதுறை அருகே உள்ள கோடங்குடி ஊராட்சியில் உள்ள 650 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் புனிதா ஆனந்தராஜ் ரூபாய் 2000 ரொக்கம், மளிகை பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். கிராமமக்கள் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து வாங்கிச் செல்கின்றனர். மற்ற ஊராட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் கோடங்குடி ஊராட்சி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் பெண் காவலரைத் தாக்கிய நபர் கைது