ETV Bharat / state

மூன்று மயில்களை கொன்றதாக விவசாயி கைது - கடைசி விவசாயி பட பாணியில் விசாரணை!

மயிலாடுதுறை அருகே மூன்று மயில்களை கொன்றதாக விவசாயி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 23, 2023, 10:02 PM IST

மூன்று மயில்களை கொன்றதாக விவசாயி கைது

மயிலாடுதுறை: வனப்பகுதிகள் பல்வேறு காரணங்களால் அழிக்கப்படுவதால் வன உயிரினங்கள் யானைகள், புலி, சிறுத்தை, மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் வனப்பகுதிகளைவிட்டு புலன் பெயர்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மயில்கள் அதிகளவில் தமிழ்நாடு முழுவதும் வனங்களை விட்டு வெளியேறி வனபகுதி அல்லாத ஊர்களில் தஞ்சம் அடைந்துள்ளது. மேலும் இவைகள் வயல்வெளிகளில் சுற்றி திரிந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த எழுமகளூர் கிராமம் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 33 வயதான விவசாயி ஜெயசீலன். இவர் அதே கிராமத்தில் சொந்தமான விவசாய நிலம் வைத்து, விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது விவசாய நிலத்தில் மூன்று மயில்கள் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த மூன்று மயில்களை கைப்பற்றி வயலின் உரிமையாளர் ஜெயசீலனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் விளைநிலத்தில் பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தும் குருனை மருந்தினை மயில்கள் உண்டு இறந்ததாகவும், இதனால் விளைநிலத்தின் உரிமையாளரான ஜெயசீலன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனை அறிந்த ஜெயசீலன் உறவினர்கள் தங்கள் கிராமத்தில் சாராய விற்பனையை ஜெயசீலன் தடுத்ததாகவும், பாதிக்கப்பட்ட சாராய வியாபாரி மணிவண்ணன் என்பவர் திட்டமிட்டு மயில்களை கொன்று ஜெயசீலன் வயலில் வீசி சென்றதாகவும், இதனை முறையாக விசாரணை செய்யாமல், விவசாயி ஜெயசீலன் மீது வனத்துறையினர் பொய்யான வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி, அவரை விடுதலை செய்ய வேண்டும் என சீர்காழி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் காவல் ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வனத்துறை அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர்.

அப்போது காலையில் வயலுக்கு சென்று பார்த்தபோது மயில் ஏதும் இறந்து கிடைக்கவில்லை என விவசாயி ஜெயசீலன் கூறியும், அதனை வனத்துறை அதிகாரிகள் ஏற்றுகொள்ளமால் வழக்கு பதிந்ததாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லமோக் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் கடைசி விவசாயி திரைப்படம் போன்று நடைபெற்று விடுமோ என்ற அச்சம் சக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஷ்ரத்தா கொலை பாணியில் சம்பவம் - மனைவியை கொலை செய்த கணவன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.