நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மருத்துவர்கள், செவிலியரின் மகத்தான செயல்களைப் பாராட்டுவதாகவும், தன்னுடைய தொகுதி நிவாரண நிதியிலிருந்தும், தனது ஒரு மாத ஊதியத்தையும் கரோனா நிவாரண நிதிக்காக தான் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, டாடா குழுமம் நிவாரண நிதியாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசால் பயன் பெற்றுவரும் அதானி நிறுவனம் 100 கோடி மட்டுமே வழங்கியுள்ளது ஏற்புடையது அல்ல என்று விமர்சித்தார்.
இந்தியாவில் தொழில் செய்து லாபங்களை ஈட்டும் தனியார் நிறுவனங்கள் பிரதமர் பொது நிவாரணத்திற்கு நிதி வழங்க முன்வராதது கண்டனத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு மத்திய அரசு பாகுபாடின்றி ஒரு குடும்ப அட்டைக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000