மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா இளையமதுகூடம் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் ஆக்ரிஷ் (5) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் பொங்கல் பண்டிகைக்காக தனது பாட்டி வீடான குருவியாமபள்ளம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள குளத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார்.
அப்போது குளத்தில் மூழ்கி ஆக்ரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பட்டினம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவர்கள் உடற்கூராய்வுக்காக கொண்டுசென்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : பேரளம் பேரூராட்சியின் அலட்சியம்: மாணவர் விடுதி முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்!