ETV Bharat / state

5ஆவது நெல் திருவிழா கோலாகல தொடக்கம்..

நாகை: சீர்காழியில் 5ஆவது நெல் திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது.

நெல் திருவிழா
author img

By

Published : Aug 10, 2019, 4:59 PM IST

நாம் சாப்பிடும் உணவே நஞ்சாக மாறி நாளுக்கு நாள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். நாம் உண்ணும் உணவு இயற்கை உரங்களால் உருவாக்கி இயற்கை உணவுகளை உண்ண வேண்டும் என மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்து மரணமடைந்தார். அவரின் வழிகாட்டுதல்படி நெல் ஜெயராமன் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்திவந்தார்.

இந்நிலையில், கடந்த வருடம் நெல் ஜெயராமன் புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து இந்த ஆண்டு நாகை மாவட்டம் சீர்காழியில் 5ஆவது நெல் திருவிழா தொடங்கியது.

5வது நெல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது...

இந்த விழாவில் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் புகைப்படங்களை தாங்கி விவசாயிகள் உள்ளிட்டோர் இசை வாத்தியங்கள் முழங்க கொள்ளிட மூக்கூட்டில் ஊர்வலமாக வந்தனர். முன்னதாக பாரம்பரிய விவசாயத்திற்கு பயன்படுத்தும் அனைத்து இடு பொருட்களும், பாரம்பரிய நெல் விதைகள், அரிசி வகைகள் காண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.நெல் திருவிழாவில் கலந்துகொண்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மூலிகை சுக்கு காப்பி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவ்விழாவில், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், வெளிமாநில விவசாயிகள் பங்கேற்றனர்.

Intro:சீர்காழியில் பாரம்பரிய 5 ஆண்டு நெல் திருவிழா தொடக்கம். Body:நாகை மாவட்டம் சீர்காழியில் ஆண்டு நெல் திருவிழா தொடங்கியது.நாம் சாப்பிடும் உணவு நஞ்சாக மாறி நாளுக்கு நாள் பிறந்த குழந்தையிலிருந்து, பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனையை நாடி செல்லும் சூழல் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் நாம் உண்ணும் உணவு நஞ்சற்ற உணவாக இயற்கை உரங்களால் உருவாக்கி இயற்கை உணவுகளை உண்ண வேண்டுமென நம்மை விட்டு மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து மரணமடைந்தார்.அவரின் வழிகாட்டுதலின் படி நெல் ஜெயராமன் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி வந்தார். விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை எடுத்து கூறி 2 கிலோ இயற்கை விவசாய நெல்லை வழங்கி வந்தார். இந்த விழாவில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் நெல் ஜெயராமன் கடந்த 6.12.2018-ந்தேதி புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்தநிலையில் நாகை மாவட்டம் சீர்காழியில் 5-வது நெல் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து மாட்டு வண்டியில் பாரம்பரிய நெல் விதைகள் வைக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார். ஊர்வலம் கொள்ளிடமூக்கூட்டில் தொடங்கி தென்பாதியில் நெல் ஜெயராமன் அரங்கில் முடிவடைந்தது.பின்னர் நடைபெற்ற நெல் திருவிழா கண்காட்சியை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி சீர்காழி துனைகாவல் கண்காணிப்பாளர் வந்தன உழவர்கள், சமூக ஆர்வலர்கள் வேளாண்துறையை சேர்ந்த அதிகாரிகள், வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாரம்பரிய விவசாயத்திற்கு பயன்படுத்தும் அனைத்து இடு பொருட்களும், பாரம்பரிய நெல் விதைகள், அரிசி வகைகள் விற்பனை செய்யும் பிரமாண்ட கண்காட்சி நடந்தது. நெல் திருவிழாவில் கலந்துகொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மூலிகை சுக்குகாப்பி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.இயற்கை விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.