ETV Bharat / state

மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைமை மீனவ கிராமமாக தரங்கம்பாடி தேர்வு! - தலைமை மீனவ கிராம் தரங்கம்பாடி

மயிலாடுதுறை மாவட்டதின் 18 மீனவ கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், அம்மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை கிராமாக, தரங்கம்பாடி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

chief_fishing_village
chief_fishing_village
author img

By

Published : Nov 2, 2020, 10:12 AM IST

மயிலாடுதுறை : நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட
புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய மயிலாடுதுறை மாவட்டத்துக்கு, தலைமை மீனவ கிராமம் தேர்ந்தெடுக்க மீனவ கிராமங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தை மீனவ மக்கள் கூட்டினர். தரங்கம்பாடியில் நடந்த இந்தக் கூட்டத்தில், சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை,
தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர்குப்பம், மடத்துக்குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், சின்ன கொட்டாய்மேடு, பழையாறு, கொடியம்பாளையம், சாவடிகுப்பம் ஆகிய 18 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு, தரங்கம்பாடி மீனவ கிராமத்தை தலைமை
கிராமமாக ஏற்றுக்கொள்வது என்றும், விரைவில் இதுதொடர்பாக நடைபெறவுள்ள பதவி ஏற்பு
மற்றும் பரிவட்டம் கட்டும் விழாவிற்கு நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவகிராம பஞ்சாயத்தார்கள், நாகப்பட்டினம் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை அழைத்து, அவர்கள் முன்னிலையில் நிகழ்சியை நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திரளான மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.