ETV Bharat / state

வீட்டை காலி செய்யக்கோரி மிரட்டியதால் முதியவர் அதிர்ச்சியில் மரணம்!

நாகை: மயிலாடுதுறையில் பணத்தை திருப்பித் தராமல் ஒத்திக்கு இருக்கும் வீட்டைக் காலி செய்யக்கோரி மிரட்டியதால் அதிர்ச்சியில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tenent problem, old man died
author img

By

Published : Jul 12, 2019, 6:03 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை துபாஷ்தெரு, பட்டமங்கலம் தெரு பகுதியில் ஜர்ஜிஸ் என்பவருக்கு சொந்தமான வீடுகள், இடம் மற்றும் கடைகள் உள்ளது. ஜர்ஜிஸ் வெளிநாட்டில் இருப்பதால் இடத்தை பராமரிப்பதற்கும், வீடுகள் ஒத்தி மற்றும் வாடகைக்கு விடுவதற்காக பவர் ஏஜண்டாக உறவினர் தாஜூதீன் என்பவரை நியமித்துள்ளார்.

துபாஷ்தெருவில் உள்ள 8 வீடுகளில் 6 வீட்டிற்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் என்று ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டத் தொகையை பவர் ஏஜெண்ட் தாஜ்தீனிடம் ஒப்பந்தம் போட்டு ஒத்திக்கு வசித்து வருகின்றனர். இதில் பவர் ஏஜெண்ட் தாஜூதீன் கடந்த மாதம் இறந்துள்ளார்.

இதனையடுத்து இடத்தின் உரிமையாளர்களிடம் ஒத்திக்கு இருப்பவர்கள் முறையிட்டபோது ஒப்பந்தங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அனைவரும் சாமிநாதன் என்பவர் தலைமையில் கடந்த வாரம் நாகை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

வீட்டை காலி செய்ய கோரி மிரட்டியதால் முதியவர் அதிர்ச்சியில் மரணம்!

இந்நிலையில் இன்று காலை அடியாட்களை வைத்து ஒத்திக்கு இருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியுள்ளனர். இச்சம்பவத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு வரதராஜன்(70) என்ற முதியவர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். தங்களுடைய பணத்தை திருப்பித் தராமல் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இறந்த வரதராஜன் உடலை அடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:மயிலாடுதுறையில் போக்கிற்கு வீட்டை கொடுத்தவர் பணத்தை திருப்பித் தராமல் வீட்டை காலி செய்ய கோரி மிரட்டியதால் முதியவர் அதிர்ச்சியில் மரணம். 10-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 70 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை துபாஷ்தெரு, பட்டமங்கலம் தெரு பகுதியில் ஜர்ஜிஸ் என்பவருக்கு சொந்தமான வீடுகள், இடம் மற்றும் கடைகள் உள்ளது. ஜர்ஜிஸ் வெளிநாட்டில் இருப்பதால் இடத்தை பராமரிப்பதற்கும், வீடுகள் போக்கியம் மற்றும் வாடகைக்கு விடுவதற்காக பவர் ஏஜண்டாக உறவினர் தாஜூதீன் என்பவரை நியமித்துள்ளார். துபாஷ்தெருவில் உள்ள 8 வீடுகளில் 6 வீட்டிற்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் என்று ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டத தொகையை போக்கியமாக பவர் ஏஜெண்ட் தாஜ்தீனிடம் ஒப்பந்தம் போட்டு போக்கியத்திற்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் பவர் ஏஜெண்ட் தாஜூதீன் கடந்த மாதம் இறந்துள்ளார். அப்போது இடத்தின் உரிமையாளர்களிடம் போக்கிற்கு இருப்பவர்கள் முறையிட்டபோது ஒப்பந்தங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அனைவரும் சாமிநாதன் என்பவர் தலைமையில் கடந்த வாரம் நாகை எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை போலீசார் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அனுப்பி உள்ளார். இந்நிலையில் இன்று காலை அடியாட்களை வைத்து துபாஷ் தெருவில் குடியிருப்பில், போக்கிற்கு வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியுள்ளனர். இச்சம்பவத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு வரதராஜன்(70) என்பவர் அதிர்ச்சியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த குடியிருப்பில் இருப்பவர்களிடம் வட்டி தருவதாக கூறி 20 இலட்சத்திற்கும் மேல் பணத்தை பெற்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தங்களுடைய பணத்தை திருப்பித் தராமல் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இறந்த வரதராஜன் உடலை அடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி :- சாமிநாதன் - பாதிக்கப்பட்டவர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.