தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நாகை மாவட்டம் தேரழுந்தூரில் நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், கொள்ளிடம், சீர்காழி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 ஒன்றியங்களில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பயிற்சி முகாமில் பங்கேற்க பல்வேறு பகுதிகளிலிருந்து 100 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்ததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாகவும், பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில் கழிப்பிட வசதிகூட இல்லை என்றும், வெளியூரிலிருந்து வந்த இரண்டு ஆசிரியர்களுக்கு விபத்து ஏற்பட்டதாகவும், கையொப்பம் வாங்குவதற்காக தங்களை நீண்ட தூரம் பயணிக்க வைப்பதாகவும் கூறி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பயிற்சி வகுப்பில் பங்கேற்க அதிகளவு பயண செலவு செய்ய வேண்டியுள்ளதால் பயிற்சி முகாமை அந்தந்த ஒன்றியங்களில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்க:வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகள் - ஆட்சியர் ஆய்வு!