ETV Bharat / state

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு - காவல் துறையினர் விசாரணை! - Nagai Latest News

நாகை : தரங்கம்பாடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 2.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக மதுபாட்டில்கள் அடையாளம் தெரியாத நபர்களால் திருடிச்செல்லப்பட்டுள்ளது.

 tasmac theft in Nagai
tasmac theft in Nagai
author img

By

Published : Jul 11, 2020, 7:30 AM IST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், குரங்குபுத்தூர் கிராமத்தில் காவிரிக்கரை ஓரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன் தினம் இரவு(ஜூலை 9) வழக்கம்போல் 8 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியன், விற்பனையாளர்கள் சென்றுள்ளனர்.

மறுநாள் காலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர், டாஸ்மாக் கடை ஊழியர்கள் சென்று பார்த்தபோது, 18 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 2.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக மதுபாட்டில்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்குகளை கழட்டி, காவிரி கரைஓரம் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் டாஸ்மாக் கடையில் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், கேமரா ஹார்டு டிஸ்க்கை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.