பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “மேட்டூர் அணையில் 119.5அடி தண்ணீர் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் போதுமான மழையும் பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைப் போக்குவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகளை கர்நாடக அரசு திறந்து விடுவதை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். அதிமுகவுடன் உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும். பாமகவிற்கான உரிய பங்கை அதிமுகவிடம் கேட்டுப்பெறுவோம்” என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!