ETV Bharat / state

'இடதுசாரிகளுடன் காங்கிரஸ் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற திருமாவின் பேச்சு வரவேற்புக்குரியது'  - கே.எஸ்.அழகிரி

author img

By

Published : Mar 13, 2022, 8:37 PM IST

Updated : Mar 13, 2022, 9:08 PM IST

மதச்சார்பற்ற கூட்டணியில் இந்தியாவில் இருக்கின்ற எல்லா இடதுசாரிகளையும், முற்போக்காளர்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டிதான் செய்து வருகிறோம்; எனவே, காங்கிரஸூடன் இடதுசாரிகள் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற திருமாவின் கருத்து வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

’திருமாவின் கருத்தை வரவேற்கிறேன் ’- கே.எஸ்.அழகிரி

மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 'ஜனநாயகத்தின் வெற்றியோ, தோல்வியோ ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு இயக்கத்தினுடைய போக்கை மாற்றிவிட முடியாது.

திருமாவின் கருத்து வரவேற்கத்தக்கது:

100 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சியானது பல முறை பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஏராளமான முறை வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் பின்னடைவின் மூலமாக மேலும் எங்களை நாங்கள் எப்படி வழி நடத்திச்செல்ல வேண்டும் என்பதையறிந்து கொண்டுள்ளோம்.

இதில் ஏதும் சிரமம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. திருமாவளவன் அவர்கள் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து நின்று செயலாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது வரவேற்க வேண்டிய கருத்து. ஏற்கெனவே மதச்சார்பற்ற கூட்டணியில் இந்தியாவில் இருக்கின்ற எல்லா இடதுசாரிகளையும், முற்போக்காளர்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டிதான் செய்து வருகிறோம். எனவே, அந்தக் கருத்து ஏற்புடையதே. நிச்சயமாக அது வெற்றி பெறும்' என்றார்.

'இடதுசாரிகளுடன் காங்கிரஸ் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற திருமாவின் பேச்சு வரவேற்புக்குரியது' - கே.எஸ்.அழகிரி

அவர்கள் ரத்தத்தில் ஊறியது!

மேலும், சென்னையில் பட்டியலினத்தவர் இடத்தை கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக அர்ஜூன் சம்பத் கூறியது பற்றிய கேள்விக்கு, 'அர்ஜூன் சம்பத் போன்றோருக்கு ரத்தத்திலேயே ஊறி உள்ளது எல்லாரையும் சோதனை செய்து பார்ப்பது. சென்னை மேயரானவருக்கு அரசின் சான்றிதழ் பட்டியலினத்தவர் என்று உள்ளது. அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. அதனை ஏற்காமல் அவர்கள் எந்தப் பிரிவை சார்ந்தவர்கள் என சோதித்துப்பார்ப்பது ஒரு தவறான அணுகுமுறை' என்றார், கே.எஸ். அழகிரி.

இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 60 புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி!

Last Updated : Mar 13, 2022, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.