ETV Bharat / state

அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பதற்கு ஏற்ப அரசாணை பிறப்பிக்க வேண்டும் - தமிழ்நாடு பதிவுத்துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை!

Registration Association requests: அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பதற்கு ஏற்றவாறு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுத்துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Registration Association
அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பதற்கு ஏற்றவாறு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க கோரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 10:28 AM IST

அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பதற்கு ஏற்றவாறு அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு பத்திரப் பதிவுத்துறை சங்கம் கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழ்நாடு பதிவுத்துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் துணைத் தலைவர் ரகுநாதன் தலைமையில் நேற்று (செ.30) நடைபெற்றது.

அமைப்பாளர் காசி.வெங்கடேசன், மாநில பொதுச் செயலாளர் சிவநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பதிவுத்துறையின் செயல்பாடுகள், ஓய்வு பெற்றோரின் பணப் பலன்கள் உரிய காலத்தில் அளிக்கப்படாமை, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுற்று தீர்ப்பளிக்கப்பட்டு பல மாதங்களாகியும் பதிவுத்துறையில் தீர்வு காணப்படாத நிலுவைகள், சேவை துறையாக இருந்து தற்போது வருவாய் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு பதிவு செய்ய வரும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் துறையாக மாறி உள்ள அவலம், பொதுமக்களை வதைக்காமல் அரசுக்கு வருவாய் பெற்று தரும் ஆக்கப்பூர்வமான யோசனைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மாநில அமைப்பாளர் காசி வெங்கடேசன் கூறுயதாவது, “பதிவுத்துறை பொதுமக்களுக்கு அவல நிலையை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்றம், காவல்துறை, அறநிலையத்துறை, வருவாய்த்துறை, வருமான வரித்துறை ஆகிய துறைகளின் பணிகளை மட்டுமே பதிவுத்துறை செய்து வருகிறது.

பதிவுத்துறையில் இடைத்தரகர்களின் தலையீடு காரணமாக பொதுமக்களின் செலவு பல மடங்கு அதிகரிக்கிறது. பத்திரப்பதிவு அலுவலரின் பெயரை சொல்லி இடைத்தரகர்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலரை பொதுமக்கள் நேரடியாகச் சந்தித்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் சிவநாதன் கூறியதாவது, “எவ்வித தண்டனையும் வாங்காதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், முதுநிலை கோரி பதிவுத்துறை அலுவலகத்தில் நிலுவையில் உள்ள 500 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு முன்னதாக, அங்கீகரிக்கப்படாத மனைகளை வாங்கிய பொதுமக்கள் பல்வேறு செலவினங்கள் காரணமாக அதனை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் விற்பனை செய்யும் வகையில், உரிய அரசாணையை பிறப்பித்தால் தமிழக அரசுக்கும் வருவாய் வந்து சேரும், பொதுமக்களுக்கும் புதிய தீர்வு கிடைக்கும்” என்றார்.

இதையும் படிங்க:குன்னூர் பேருந்து விபத்து! சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.