உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா தொற்று காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு மாநிலங்களுக்கு உள்ளே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு பேருந்துகள் புதுச்சேரிக்கும், புதுச்சேரி பேருந்துகள் தமிழ்நாட்டிற்கும் போக்குவரத்து இன்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இச்சூழலில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியிடம், தமிழ்நாடு பேருந்துகள் புதுச்சேரிக்கு வந்து செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசுடன், புதுச்சேரி அரசு பேச்சுவார்த்தை நடத்தி, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை தொடர அனுமதி பெற்றது. அதன்படி எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:யாரோ பெற்ற பிள்ளைக்கு; நான் தான் தகப்பன் என்பது போல திமுக செயல்படுகிறது!