ETV Bharat / state

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல்! - Tamil Nadu Government Employees Union protest

மயிலாடுதுறை: சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர்.

Tamil Nadu Government Employees Union protest
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல்
author img

By

Published : Feb 5, 2021, 10:07 PM IST

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 4ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர், செவிலியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநில அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மனநலம் பாதித்தவர் மீது லாரி மோதல்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.