எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழ்நாடு மீனவர்களை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பு மெரிஹானா முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை மீனவர்கள் தாயகம் திரும்பவில்லை.
உணவுக்கும், தங்குவதற்கும் இடமில்லாமல் தவிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள், தங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு