நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பாஜக தலைவர் நியமன பட்டியலில் தனது பெயர் உள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன், சாதி அரசியல் இருக்காது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த திமுக தற்போது அதனை எதிர்க்கிறது. பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் பணம் கொடுக்க உள்ள திமுக அதனை அவரது கட்சியினருக்கு வழங்கினால் ஓட்டுகளாவது கிடைக்கும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 50 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறாது. இந்திய பொருளாதார வீழ்ச்சியால் யாரும் உணவின்றி இருக்கவில்லை.
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திமுக கூட்டணி கட்சியினர் தவறாக பரப்புரை செய்து வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே ரஜினி அரசியலுக்கு வருவார்" என தெரிவித்தார்.
"பிடிக்காத நபரிடம் அமைதியாக இருப்பேன்" - மாணவிக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி
மேலும், பிரதமர் மோடி செய்த சாதனைகள் சட்டங்கள் கருத்துக்கள் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜகவினர் தவற விட்டனர் என்றார்.