ETV Bharat / state

சுருக்குமடி வலை... மீனவர்களிடையே தகராறு: ஆட்சியர் வரை சென்றது விவகாரம்! - சுருக்குவலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடிவலை எதிர்ப்பு, ஆதரவு மீனவர்கள் தனித்தனியே ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

fisher man protest  fisher man  mayiladuthurai news  mayiladuthirai latest news  surukkuvalai supporter and against fisheries protest  surukkuvalai  mayiladuthirai collector  மயிலாடுதுறை செய்திகள்
மீனவர்கள்
author img

By

Published : Aug 17, 2021, 8:09 AM IST

மயிலாடுதுறை: சுருக்கமடிவலை எதிர்ப்பு, சுருக்கமடி வலை ஆதரவு மீனவர்களிடையே ஏற்பட்டுவரும் பிரச்சினையைத் தவிர்க்க 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து குழு அமைத்து கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி கிராம மீனவர்கள் தடையை மீறி சுருக்குமடி வலையுடன் மீன்பிடிக்க 36 படகுகளில் சென்றனர்.

படகுக்குத் தீவைப்பு

அதை எதிர்த்து தரங்கம்பாடி, வானகிரி உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று மறிக்க முயன்றனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையிலான காவலர்கள் இருதரப்பு மீனவர்களையும் எச்சரித்ததன்பேரில் கரைக்குத் திரும்பினர்.

வழியில் வானகிரி கிராம கடல் பகுதியில் ஏற்பட்ட மோதலில் பைபர் படகு உடைக்கப்பட்டதுடன், இரண்டு மீனவர்கள் காயமடைந்து சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வானகிரி படகுத்துறையில் நிறுத்தப்பட்டிருந்த பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பைபர் படகுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீவைக்கப்பட்டது. இதனால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அனைத்தையும் பறிமுதல்செய்ய வேண்டும்

இந்நிலையில், சுருக்குமடி வலைக்கு எதிரான தரங்கம்பாடி தலைமையிலான 20 மீனவ கிராம நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், “பைபர் படகை மோதிய விசைப்படகைப் பறிமுதல்செய்ய வேண்டும், காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், தடைசெய்யப்பட்ட வலைகள், அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் அனைத்தையும் பறிமுதல்செய்ய வேண்டும்.

வருகிற 20ஆம் தேதிவரை தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்ந்து, 21ஆம் தேதி நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இணைந்து போராட்டம் நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஒற்றுமையைச் சீர்குலைத்து வன்முறை

இதேபோல் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் பூம்புகார் தலைமையிலான மீனவ கிராம நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (ஆகஸ்ட் 16) மனு அளித்தனர். அதில், “கடந்த 14ஆம் தேதி பூம்புகார் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, நாகப்பட்டின மாவட்ட மீனவர்கள் தேவையின்றி, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து வன்முறையைத் தூண்டும்வகையில் சில கிராம மீனவர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்திவிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்திவிட்டு பூம்புகார் கடல் பகுதியில் நாகப்பட்டின மாவட்ட மீனவர்கள் மட்டும் இரவு பகலாக தடைசெய்த வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துவருகிறார்கள். உடனடியாக மாவட்ட நிர்வாகம், நாகை மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நாகை மாவட்ட மீனவ கிராமங்கள் மயிலாடுதுறை மாவட்ட கிராம நிர்வாகத்தில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆட்சியரிடம் மனு

அப்படி நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தலையிடும்பட்சத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு ஏற்று பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும்” என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். இதனால் இருதரப்பு மீனவர்களிடையே தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது.

இதையும் படிங்க: பைக் மீது மோதிய கார்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.