கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவின் போது பொதுவெளியில் பணியில் ஈடுபட்டுள்ள சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படைக் காவலர்கள், தமிழ்நாடு சிறப்புப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்களுக்கு கரோனா வைரஸ் ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் சற்று கூடுதலாக உள்ளது.
இதனையடுத்து அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அரசு வழிகாட்டுதல்படி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஜிங் மாத்திரைகள், சித்த மருத்துவ மருந்தான கபசுர பொடியை வழங்கினர்.
மேலும் கரோனா வைரஸ் தொற்றுப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுறுத்தினர்.