கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சம்பா சாகுபடி நிறைவடைந்து, தற்போது டெல்டா மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தாளடி நெல் சாகுபடி தொடங்கி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியை அடுத்த சீயாத்தமங்கை, ஆதினக்குடி, அம்பல், திருப்பயத்தாங்குடி, அண்ணாமண்டபம் உள்ளிட்டப் பகுதிகளில், தற்போது மின் மோட்டார் மூலம் வயல்களில் நீர்ப்பாய்ச்சி, ரொட்டேட்டர் மூலம் தாளடி நெல் சாகுபடிக்கான உழவுப் பணிகளில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சில நாள்களில் விவசாயிகள் நாற்று நடவும் பணியில் ஈடுபடுவர்.
இந்த நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்ப் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதாலும், விவசாயப் பணிகளில் ஈடுபட குறைந்த அளவிலேயே, விவசாய கூலித் தொழிலாளர்கள் பணிக்கு வரத் தயங்குகின்றனர்.
"இதனால் இந்த ஆண்டு இருபோக சாகுபடி நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு கரோனா பேரிடியாக வந்துள்ளது", என விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : கரோனா வைரஸ் ஆளை கொல்வது எப்படி?