மயிலாடுதுறை நகரில் மாயூரம் நகர கூட்டுறவு வங்கி இயங்கிவருகிறது. இந்தக் கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர் உமாதேவி என்பவர் நிர்வாக அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், ஊழியர்களுக்கு விரோதமாகச் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் வங்கியின் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு மாவட்டத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் 25 பேர் கலந்துகொண்டு, நிர்வாக இயக்குநரைப் பணிமாற்றம் செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க:நகைக்கடன் தள்ளுபடி வதந்தியால் வங்கி முன் குவிந்த பொதுமக்கள்!