மனுதர்மம் குறித்து கருத்து பதிவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை கண்டித்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜக சார்பில் இன்று (அக்.27) போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும் தடையை மீறி மயிலாடுதுறையிலிருந்து வாகனங்களில் சிதம்பரம் புறப்பட்ட பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் தலைமையிலான 60க்கும் மேற்பட்டோரை கால் டாக்ஸ் பகுதியில் வைத்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருமாவளவனை ஏன் கைதுசெய்யவில்லை?