ETV Bharat / state

யானைகள் ஆசீர்வாதத்தில் மருத்துவக் குணங்கள்- கம்பீர தோற்றத்தில் இருக்கும் சிறப்புகள் - world elephant day 2021

மனித இனத்திற்கும், காடுகளின் வளத்துக்கும் இன்றியமையாததாக விளங்குவன யானைகள். கலாசார பெருமைகளை பறைசாற்றும் யானைகளை அனைத்து கோயில்களிலும் வளர்க்க வேண்டும் என்பதே யானை பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

elephant
யானைகள்
author img

By

Published : Aug 12, 2021, 6:17 AM IST

Updated : Aug 12, 2021, 3:05 PM IST

யானை வளர்ப்பு என்பது ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருக்கிறது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் ஒரே உயிரினம் யானை மட்டுமே. சங்க காலத்தில் போர் புரியவும் தமிழர்கள் யானைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

கோயில்களில் யானைகள் எதற்கு என்ற கேள்வி எழும். கோயில் கட்டுவதற்கு யானைகள் பல உதவிகள் செய்துள்ளன. நாம் இன்று மலைத்து பார்க்கும் பிரமாண்ட கோயில் கோபுரங்களை அமைக்க யானைகளே பயன்படுத்தப்பட்டன. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக யானைகள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

அதேபோல நாடாளும் அரசனை தேர்ந்தெடுக்கவும், யானைகளை விட்டு மாலை போடும் வழக்கமும் அந்த காலத்தில் இருந்தது. வளர்ப்பு யானைக்கும், அதன் பாகனுக்கும் இடையேயான உறவு மகத்தானது. யானைகள் இலை, செடி, கொடி, மூங்கில், கரும்புகளை விரும்பி உண்ணும். தினமும் 200லிருந்து 250 கிலோ இலை தழைகளையும், 150லிருந்து 200 லிட்டர்வரை தண்ணீரையும் உட்கொள்கிறது.

யானைகள் ஆசீர்வாதத்தில் மருத்துவ குணங்கள்

கடவுளுக்கு இணையாக கருதப்படும் யானைகளுக்கு தினமும் கோயில்களில் கஜ பூஜை செய்வதும், திருமஞ்சனம் (தீர்த்தம்) எடுத்துவந்தும் வழிபாடு செய்துவருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு நாசி துவாரங்கள் வழியாகவும் யானை சுவாசிக்கும்.

அதைப் பெறுவதற்கு நீண்ட பயிற்சி எடுப்பது அவசியம் என்றாலும் அதனை யானைகள் இயற்கையாகவே பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும். அதனால் யானைகளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தீய சக்திகளை அழிக்கும் யானைகள்

சுவாமி புறப்பாட்டின்போது கம்பீரமாக யானைகள் நடந்து செல்லும். அவ்வாறு யானைகள் முன்னே செல்வதால் தீய சக்திகள் அனைத்தும் அழிந்துவிடும் என்பது ஐதீகம். முன்பு தமிழ்நாட்டில் பல கோயில்களில் யானைகள் இருந்த நிலையில், தற்போது 30 யானைகள் மட்டுமே உள்ளன.

உதாரணத்திற்கு தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் படையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருந்த நிலையில், தற்போது ஒரு யானைகூட தஞ்சை பெரிய கோயிலில் இல்லை.

அதேபோல மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள (நாற்பது கிலோமீட்டர் சுற்றியுள்ள சிதம்பரம், கும்பகோணம், திருவாரூர் உள்ளடக்கிய) பகுதிகளில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட யானைகள் கோயில்களிலும், மடங்களிலும் இருந்தன.

யானைகள் எண்ணிக்கை குறைவு

தருமபுரம் ஆதீனம் மடத்தில் மடம் நலன் யானை, வைதீஸ்வரன்கோயில் தையல்நாயகி யானை, சீர்காழி ஜெயந்தி யானை, சிதம்பரம் நடராஜன் யானை, திருப்பனந்தாள் மடம் பெரியநாயகி யானை, ஜெயந்தி யானை, திருவாவடுதுறை மடம் ஜெயா யானை, திருவிடைமருதூர் கோமதி யானை, திருபுவனம் தருமி யானை, கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் யானை, சுவாமிமலை துர்கா யானை, திருப்புகலூர் சூலிகாம்பாள் யானை, திருக்குவளை தியாகராஜன் யானை, திருவாரூர் கமலாம்பாள் யானை, நாகூர் தர்கா பாத்திமா பீவீ யானை என அதன் பட்டியல் நீண்டுக்கொண்டே சென்றது.

ஆனால் தற்போது மயிலாடுதுறை அபயாம்பிகை யானை, திருக்கடையூர் அபிராமி யானை, உப்பிலியப்பன் கோயில் பூமா தேவி யானை, கும்பகோணம் மங்களம் யானை ஆகிய நான்கு யானைகள் மட்டுமே இருக்கின்றன.

ஒரு யானை இருந்தால் வனத்தையே உருவாக்கலாம்

காடுகளில் வாழும் யானைகளைவிட, வளர்ப்பில் வாழும் யானைகள் அதிக வருடங்கள் உயிர் வாழ்கின்றன. யானைகளுக்கு மனிதர்களைப் போல மூளைப்பகுதியில் உணர்ச்சிப் பகுதி அமைந்துள்ளது.

இதனால், கோபம், பாசம், கண்ணீர் எனப் பல விஷயங்களில் யானைகள், மனிதர்களை ஒத்தது. ஒரு யானை இருந்தால் ஒரு வனத்தையே உருவாக்கலாம் என கூறுவார்கள். அதற்கு காரணம் யானையின் சானமும், அவற்றின் அறிவுத்திறத்தையும்தான்.

மற்றொரு பக்கம், காடுகளில் வாழும் யானைகளின் வலசை பாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதனால் அவை ஊருக்குள் வருகின்றன. பல்வேறு சிறப்பு கொண்ட யானைகளை அதன் பாணியிலேயே வாழவிடுவது வனங்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும், இயற்கையான சூழலில் வளர்ப்பு யானைகளை வளர்க்க வேண்டும் என்று கூறும் சட்டம், யானைகளுக்கு இயற்கையாக நடைபெற வேண்டிய இனப்பெருக்கத்தை மட்டும் தடை செய்கின்றது என யானைப் பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளை பாதுகாக்க அரசு வழிவகை செய்ய வேண்டும், வளர்ப்பு யானைகளின் இனப்பெருக்கத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

யானை இல்லாத கோயில்களுக்கு யானை வழங்கி நமது கலாசார பாரம்பரியத்தின் அங்கமான யானைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே யானை பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: வனப்பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதிக்குத் திரும்பும் ரிவால்டோ யானை

Last Updated : Aug 12, 2021, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.