தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று இரவு புயலாக மாறி, வரும் புதன்கிழமை மேற்கு வங்கம், வங்கதேசம் பகுதிகளில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆம்பான் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால், நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்பன் புயல் தீவிரமடைய வாய்ப்பு!