மயிலாடுதுறை: ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் இருந்து அசிக்காடு செல்லும் சாலையில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது.
சாலையின் இருபுறமும் சுமார் இரண்டு அடி விரிவாக்கம் செய்வதற்காக 2-வது கண்மாய் அருகில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மண்ணை அள்ளும்போது கற்சிலை ஒன்று தட்டுப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தகவலறிந்த கிராம மக்கள் அச்சிலையை எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து, பூ, பழம் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
பின்னர் கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில், மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் குலோத்துங்கன் ஆகியோர் சிலையை மீட்டு மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
சுமார் 3 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள சிலையில் வலது கை பக்கம் லேசான சிதைவு ஏற்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் ஆய்வுக்குப் பின்னரே சிலை எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'ஒன்றியம்' எனும் வார்த்தையை கூறியே ஒப்பேற்ற எண்ணாதீர்கள் - சீமான்