நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேரூராட்சி செபஸ்தியார் நகரில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பள்ளமான பகுதிகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முகாமிட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை கான்கிரீட் குழாய்கள் மூலம் வெளியேற்றினர்.
இதையும் படிங்க: நாகையில் பலத்த மழை! பொதுமக்கள் பாதிப்பு!