மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசைக் கண்டித்து எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எஸ்ஆர்எம்யு மயிலாடுதுறை கிளைத் தலைவர் செல்வம் தலைமை வகிக்க திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே துறை, பணிமனைகள், ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதைக் கண்டிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடக்கோருவது, 252 ரயில்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, ரயில் நிலையங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்கொண்டனர்.
இதையும் படிங்க: தனியார் மயமாகிய ஊட்டி மலை ரயில்: ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்ஆர்எம்யூ!