ETV Bharat / state

விஸ்வரூபம் எடுக்கும் விசைப்படகு ஏலம்: நாகை மீனவர்கள் கோரிக்கை

author img

By

Published : Feb 10, 2022, 1:53 PM IST

விசைப்படகு ஏலம் விவகாரத்தால் இந்திய-இலங்கை இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு நாகை மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

விஸ்வரூபம் எடுக்கும் விசைபடகு ஏலம்- நாகை மீனவர்கள் கோரிக்கை!

நாகப்பட்டினம்: கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டின் மீனவர்களைச் சிறைப்பிடிப்பதும் அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகின்றது. அதேபோல் இலங்கையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சிறைப்பிடிப்புச் சம்பவம், மீன் வளங்கள் சுரண்டப்படும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன.

இதனிடையே இந்த விவகாரம் இந்திய-இலங்கை இருநாட்டு மீனவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாகை புதுக்கோட்டை ராமேஸ்வரம் காரைக்கால் ஆகிய நான்கு மாவட்ட மீனவர்களின் காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டில் உள்ள நான்கு மாவட்ட மீனவர்களின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவாதித்தனர். இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட தமிழ்நாட்டின் மீனவர்கள், அவர்களது படகுகள் ஆகியவற்றை விடுதலை செய்யும் நேரத்தில் இந்தியா அரசால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை நாட்டு மீனவர்கள், படகுகள் ஆகியவற்றை விடுதலை செய்ய வேண்டும்.

நான்கு மாவட்ட மீனவர்களின் காணொளிக்காட்சி ஆலோசனைக் கூட்டம்
நான்கு மாவட்ட மீனவர்களின் காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டம்

இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் வேண்டும்!

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இருநாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தியா இலங்கை இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் கொண்ட குழு திமுக ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.

சென்னையில் காணொலி வாயிலாக நடந்துமுடிந்த பேச்சுவார்த்தை குறித்து தமிழ்நாட்டின் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டின் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நாகை மீனவர்கள் கோரிக்கை

இதையும் படிங்க:60 இந்திய மீனவர்களைச் சிறைப்பிடித்த பாகிஸ்தான் கடற்படை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.