மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ் (56). நேற்றிரவு (அக். 23) பணியை முடித்துவிட்டு செம்பனார்கோவிலில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
ஏவிசி கல்லூரியைக் கடந்து விளநகர் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம், நேருக்கு நேர் மோதியதில் தலை குப்புற சாலையில் விழுந்து அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அவரை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
செம்பனார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவருக்கு மனைவி ஜோஸ்மின் சிந்தியா (46) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி: பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஒளிரப்போவது எப்போது?